கொரோனா பரவலை தடுக்க பணியாற்றும் ஒடிஷா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டின் மருத்துவராக போராடிக்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஒடிஷா மாநில மருத்துவர்களுக்கு நான்கு மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் ஒரிசாவில் மருத்துவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பாக ஒரிசா மாநில அரசு கொரோனா பரவலை மாநில பேரிடராக அறிவித்த நிலையில் தற்போது மாநில மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.