Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்; அமைச்சரவை ஒப்புதல் …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தையும் உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கோத்துள்ளது.

முன்னதாக இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு முதலமைச்சரிடம் அறிக்கை கொடுத்தார்கள். இது அமைச்சரவையின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதே போல கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற கேபினட் மீட்டிங்கில் சட்டத்துறை ஆலோசனையுடன் அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு,  அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் அந்த சட்டம் மெருகூட்டப்பட்டு மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்பட்டதாக இன்றைக்கு சொல்லப்பட்டது. இதற்க்கு நடந்து முடிந்த கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சருடைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலமாக இந்த சட்டம் மசோதா சட்டம் என்பது உடனடியாக அமலுக்கு வருகிறது.

கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கவர்னர் உடைய ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது. அதற்கு பின்னர் வரக்கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் சட்டசபையில் வைத்து இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு,  முழுமனதாக நிறைவேறப்படும். ஆனால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதால்,  உடனடியாக இந்த சட்டம் என்பது அமலுக்கு வர இருக்கின்றது.

Categories

Tech |