Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஷாக்… மத்திய அரசு புது முடிவு…. வேதனையில் பொதுமக்கள்…. குஷியில் ஆன்லைன் கேம் நிறுவனங்கள்..!!

ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர்  கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம்.  அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய  வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எடுத்து ஆன்லைன் நிறுவனங்கள் நாட்டில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க  வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்,  மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிகளை வகுக்கவும், அதனை கண்காணிக்கவும் நோடல் ஏஜென்சியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும் என தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கான நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு இனிய செயல்படுவதால் மாநில அரசாங்கங்களால் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க முடியாது.

அதை கட்டுப்படுத்துவது,  தடை செய்வது இனி மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு நோடல் ஏஜென்சியாக செயல்படுவதற்கு ஆன்லைன் கேம் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Categories

Tech |