தமிழகத்தில் பிப்-8 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எட்டாம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளது.