அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு ஆன பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் ஓபிஎஸ் இடமிருந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைப் பறிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு அந்த பதவியை எஸ் பி வேலுமணி இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.