Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு …!!

தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார்.

இந்நிலையில் 144 உத்தரவு குறித்த விளக்கம் வெளியாகியுள்ளது. அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடபப்ட்டுள்ளது.இதில் உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை.

பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட அனுமதியில்லை என்று என்றும் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு அனைத்தும் ஏப்ரல் 1 காலை வரை அமுலில் இருக்கும்.

Categories

Tech |