கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் தமிழக அரசு இன்று அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவியை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் பல்ஸ் ஆக்சி மீட்டரை தினமும் இருமுறை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை கணக்கெடுத்து அவற்றை தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.