Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது.

கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 ஆண்டுகளில் 44வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது .

Image result for mettur dam

அணைக்கு வரும் அனைத்து உபரி நீரும் திறந்து விடப்படுவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த அறிவிப்பை  பொதுப்பணித் துறை அலுவலர்கள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |