Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரம் கைது” CBI அதிரடி…!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் என்று நினைக்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Image result for p.chidambaram

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் ஒரு குழு_வாக  சென்று இருக்கிறனர். ஒருவேளை அவர்கள் சிபிஐ முன்பு ஆஜராவதற்காக மீண்டும் ஒரு சம்மன் அளிப்பதற்கு சென்று இருக்கலாம் அல்லது கைது செய்வதற்கு தடை இல்லை என்பதால் கைது செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் ஒரு குழுவாக சென்றுள்ளதால் இது ப.சிதம்பரத்திற்கான கைது நடவடிக்கை என்றும் சொல்லப்படுகின்றது.

Categories

Tech |