Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பஞ்சாயத்து தலைவர் – கல்லூரி மாணவி வெற்றி …..!!

கிருஷ்ணகிரியில்சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே-எம் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இவர் 210 வாக்குகள் வித்தியாசத்தில் பல்வேறு ஆளுமைகளை மிஞ்சி வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் என்னை நம்பி  4 கிராமங்கள் ஓட்டு போட்டுள்ளது.அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், எங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தெரிவித்தால். இவர் தற்போது படித்துக் கொண்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |