Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் மேல்முறையீடு விசாரணை….!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா உழல் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு இரத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம்விசாரிக்கின்றது

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும்  , அமலாக்காத்துறையினரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Image result for p.chidambaram

இந்நிலையில் நேற்றே இந்த முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்று  உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. இந்த வழக்கிற்காக நேற்று மூத்த வழக்கறிஞ்சர் கபில் சீபில் , அபிஷேக் சிங்வி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். இன்று நடைபெறும் இந்த வழக்கில் ப.சிதம்பரம் சார்பில் 10 பேர் கொண்ட குழு வாதிடுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டிற்கு 4 முறை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வீட்டிற்கு சென்றனர். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் இரத்து மேல்முறையீடு மனுவின் மீது வரும் உத்தரவை பொறுத்து அவர் கைது செய்யபட வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞ்சர் கபில் சீபில் ஆஜராகின்றார்.ப.சிதம்பரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை  காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |