Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிடிஆர் பேச்சால் பரபரப்பு – DMKவில் அடுத்த புகைச்சல்…!!

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலராலும் பல பரபரப்பு பேச்சுகள்,  சர்ச்சைகள் எழுந்து, திமுகவுக்குள் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் திமுக பொதுக்குழுவில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  யார் என்ன பேசுவார் என்று தெரியவில்லை ? நான் தூங்காமல் இருக்கிறேன். எனக்கு தூக்கம் வரவில்லை.

காலையில் எழுந்தவுடன் யாராவது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டி விடுவார்களோ, என்று பதறி போய் உள்ளேன். என்றெல்லாம் பேசி இருந்தார். இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில்,  தற்போது தமிழக நிதி துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பேசிய  பி.டி.ஆர்,  சுயமரியாதையினால் நான் பெரிய மனிதன். நான் ஒருபோதும் எனக்காக நோட்டீஸ் அடி என கூறியது இல்லை. நான் யாரிடமும் கையேந்தி நின்றதில்லை. என்னால் பலன் பெற்று,  நன்றி இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் மதுரையில் உண்டு. நான் எப்போதும் யாரையும் சென்று பார்க்காதே என்று யாரிடமும் சொன்னதில்லை.

பணம் அதிகம் இருந்தும் சிலர் பேராசையில் உள்ளனர். யாரையும் தூண்டி விடாமல் இருப்பதால் நான் பெரிய மனிதன். பெருந்தன்மையின்றி சிறிய மனிதர்களாக மாறி விடாதீர்கள். நான் யாருக்கும் அடிமையாக இருக்கப் போவதில்லை. பலர் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றனர். பணம் அதிகமாக இருந்தும், சிலர் இன்னும் பேராசையில் உள்ளனர் எனபரபரப்பாக பேசியுள்ளார். இவர் திமுகவில் உள்ளவர்களை தான் பேசுகின்றார் என எதிர்க்கட்சியினர் புதிய விமர்சனத்தை முன்வைத்து வருகின்றார்கள்.

Categories

Tech |