Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சென்னை கடற்கரையில் மக்களுக்கும் அனுமதியில்லை …!!

சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் , கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விடப்பட்டுள்ள விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பல இடங்களில் கூடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பொது மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள கடைகரைகளுக்கு மக்கள் வர அனுமதியில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் உள்ள  மெரினா கடற்க்கரை, திருவான்மியூர் கடற்கரை , பாலவாக்கம் கடற்கரை , பெசன்ட் நகர்  கடற்கரை  என சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் இன்று பிற்பகல் 3 மணி முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |