Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவில் பெயரில் தனிநபர் இணையதளம் – முடக்க உத்தரவு …!!

60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே  மிகவும் பிரசிதி பெற்ற கோவில.  இந்த கோவிலில் 60ம் திருமணம் மற்றும் பல்வேறு  வைபவங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற முறையில் நடைபெறும்.

இந்த கோவிலுக்கு சிறப்பு பூஜைகளுக்கு வழங்கக்கூடிய நபர்களை மோசடி செய்யும் விதமாக இந்த கோவிலின் பெயரில் தனியார் சிலர் இணையதளங்களை தொடங்கி தற்போது வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இங்கு நடைபெறக்கூடிய 60ம் ஆண்டு திருமணங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உரிய ரசீதுகளும் வரக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு இணையதளங்கள் போலியாக கோவிலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளங்கள் குறிப்பாக 2000 ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை இந்த அபிஷேகங்களுக்கு வசூலிக்கப்படுகின்றது. இதுபோன்று பல கோடி ரூபாய்கள் ஏமாற்றப்பட்டு கோவிலின் பெயரால் மோசடி செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த இணையதளங்களை  வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த இணையதளங்களை உடனடியாக முடக்குவதற்கு நீதிமன்ற உத்தரவிட வேண்டும் என்று தான்  மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணையின் போது இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  பல்வேறு வழிகாட்டுதலையும் –  உத்தரவுகளையும் தற்போது பிறப்பித்துள்ளனர். குறிப்பாக கோவிலின் பெயரில் இணையதளங்கள் தொடங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இணையதளத்தை உடனடியாக முடக்க வேண்டும்.  முடக்குவது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் மத உணர்வுகளை தயவுகூர்ந்து வியாபாரமாக ஆக்க வேண்டாம் என்றும்  நீதிபதிகளை கருத்து தெரிவித்திருக்கின்றனர். இது சம்பந்தமாக இணையதளங்களை முடக்குவது மட்டுமல்லாமல்,  இணையதளங்கள் முடக்குவது மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதாய் உறுதி செய்து,  கோவிலுடைய இணை ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Categories

Tech |