Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING:இந்துமுன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பரங்கிப்பேட்டை காவல் சாரகம் முட்லூரில் இருக்கும் இந்து முன்னணி ஆதரவாளர் வேணுகோபால். இவர் சுமார் 127 அடி உயரமுள்ள அனுமார் சிலையை நான்கைந்தாண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கின்றார். இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா ஜீப் இன் மீது இரண்டு பேர் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான தடைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரங்களில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில்,

தற்போதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |