இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இந்த முறைகேடு தொடர்பாக தான் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது. இதனால் இந்த முறைகேடு குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
அந்த காலகட்டத்தில் 600 ரூபாய் மதிப்புள்ள எல்இடி பல்புகளை ரூபாய் 4500 கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு பல்புக்கு ரூபாய் 3900 இழப்பீடு ஏற்பட்டுள்ளதால், இதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. தற்போது இதன் விசாரணை மற்றும் சோதனை பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.