Categories
மாநில செய்திகள்

BREAKING: நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் …!!

பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே கடந்த முறை செஸ் ஒலிம்பியாட்டு போட்டி சென்னையில் நடைபெற்ற போது,  அதன் துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்திருந்தார். சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

மாணவர்களுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பயணமாக தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பிலும் தகவலாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |