தமிழ்நாட்டில் அமைந்துள்ள டாட்டா தொழில் நிறுவனங்களில் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜி.எம்.ஆர் தொழில் பூங்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் ஆளை நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80 சதவீத பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
வணிக ரீதியிலான உற்பத்தியை டாட்டா எலக்ட்ரானிக் தொடங்கும் போது 80% ஊழியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்களாக இருப்பார்கள். ரூபாய் 4,684 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 18000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தற்போது வரை டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5, 500 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மூன்று நாள் வேலைவாய்ப்பு முகாமில் 355 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.