Categories
Uncategorized

BREAKING: 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் – அதிமுக அதிரடி அறிவிப்பு …!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா அரசு செய்து வருகிறது. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது 10 ஆண்டுகளாக எதையும் சொல்லியும் மக்களை திசை திருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உருவாக்கி,

பொய்யை சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து புற வாசல் வழியாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் மின்கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ  உயர்த்த மாட்டோம் என்று சொல்லிய வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, தற்போது மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

ஏற்கனவே மிகப்பெரிய துன்பத்தில் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழக மக்களை அவர்களுடைய தலையில் ஆயிரம் செங்கல்கள் கொட்டியதைப் போல கடுமையான துயரத்தையும்,  வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணத்தை உயர்த்தும் என்று சொல்லி மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |