Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்; ஓபிஎஸ் கடும் அதிர்ச்சி …!!

கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி   சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில்  தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் தேனி  என்.ஆர்.டி மருத்துவமனையில் இருந்து தேனி வனத்துறை அலுவலகத்தை நோக்கி 500 கால்நடை வளர்ப்போர் முற்றுகையிடும்  போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள். இந்த போராட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கால்நடை வளர்ப்பு சங்கத்தின்  வழக்கறிஞர் சக்திஸ்வரன்,

முக்கிய பிரமுகர்களுக்கு சிறுத்தையின் பாகங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் சிறுத்தைகள் வேட்டையாடபட்டு இருக்கலாம் என்றும்,  மேலும் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரையில் தரவில்லை என்றும்,  இந்த விஷயத்தில் வனத்துறை முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற பல்வேறு  நடவடிக்கை எடுக்க வருவதாகவும்,  இந்த தோட்டத்தில் உரிமையாளரான ரவீந்திரநாத்தை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

Categories

Tech |