புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதே போலபுதுச்சேரியின் காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அக்டோபர் 21ல் இடைத்தேர்தலும் , வாக்கு எண்ணிக்கை 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.