கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். அதே போல நமது அம்மா நாளிதழ் வெளியிட்டார் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவரும் அதே நேரத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 16 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்துவது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.