நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கு என்பது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.அதில், வருகிற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு இந்த ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பார்க்கப்படுகின்றது.ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும், வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
राज्य सरकारों से आग्रह है कि श्रमिकों की सहायता करे तथा उन्हें नजदीकी मेनलाइन स्टेशन के पास रजिस्टर कर, लिस्ट रेलवे को दे, जिससे रेलवे श्रमिक स्पेशल ट्रेन चलाये।
श्रमिकों से आग्रह है कि वो अपने स्थान पर रहें, बहुत जल्द भारतीय रेल उन्हें गंतव्य तक पहुंचा देगा।
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020