வாரிசு படப்பிடிப்பில் அனுமதி இன்றி விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வாரிசு படக்குழு பதில் கூற விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வாரிசு படத்துக்கு தொடர்ச்சியாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தமிழைப் பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகையை தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது.
அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் அன்று அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து இருக்கிறார்கள். இது குறித்து சர்ச்சை தொடர்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் படபிடிப்புக்கு உரிய அனுமதி பெறாமல் விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளிக்க விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.