ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. இதை கவனிப்பதற்காக தனக்கு பரோல் வேண்டுமென்று சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வலியுறுத்தினேன்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே அந்த மனுவை பரிசீலித்து தனக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இதற்க்கு 2 வாரத்தில் புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே தனது மகளின் திருமணத்திற்கு நளினிக்கு பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.