தமிழகத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா சமீப சில காலமாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தமிழ் தேசியம் மீது பிடித்துக்கொண்ட அவர் தமிழக அரசியல் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்க கூடியவர்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கள் , செயல்பாடுகள் அவர் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலத்தையும் அந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் தான் ஆள வேண்டும் .
ரஜினி தமிழகத்தை ஆள கூடாது. அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அவருக்கு அந்த நினைப்பு வரக்கூடாது. ரஜினி என் நண்பர் ஆனாலும் அவர் ஒரு மராட்டியர்.தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று தெரிவித்தார்.