Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ரஜினி திடீர் அதிரடி அறிவிப்பு…!!

ரஜினி ரசிகர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே பொதுமக்கள் மற்றும் அவருடைய ரசிகர்களும் பெரும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடு திரும்பிய அவர் தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டாதால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலர் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ரஜினியின்  உண்மையான காவலர்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது. மீறி கலந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஜினி ரசிகர்கள் என்ற போர்வையில் கடந்த சில தினங்களாக சிலர் போஸ்டர், போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |