Categories
மாநில செய்திகள்

Breaking: ரேஷன் கார்டு உள்ள மக்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், சட்டமன்றத்தில் தேர்தலும் வர உள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிவர் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து 3 ஆயிரத்து 262 கோடி ரூபாய் கேட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பொங்கல் பரிசு உடன் சேர்த்து புயல் நீதியும் கொடுக்க உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதில் மத்திய அரசு விடுவிக்கும் நிதியை பொருத்து கொரோனா நிதி வழங்கலாமா? வேண்டாமா? என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதே சமயத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த நிதி வருகிறதோ? இல்லையோ? அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசு நிச்சயம் காத்திருக்கிறது. என்பது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

Categories

Tech |