தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அரசு சார்ந்த பல நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. ஊழியர்கள் அனைவரையும் வீட்டில் இருந்து வேலை செய்யும் படி கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் வக்கீல்கள் உள்ளிட்ட எவரும் கீழமை நீதிமன்றத்திற்கு வர தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. கொரோனாவால் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நிஷ் உயிரிழந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.