Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: NIA விசாரணைக்கு மாற்ற பரிந்துரை – தமிழக முதல்வர் அதிரடி முடிவு ..!!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட  முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடந்த நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்துவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் உடைய செய்தி குறிப்பிலே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும்,  கோவை மாவட்டத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல்துறையை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் விசாரணையில் மாநில தொடர்பு தாண்டி,  பன்னாட்டு தொடர்பும் இருக்க வாய்ப்பிருப்பதனால் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தமிழக அரசின் உடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது

Categories

Tech |