வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது.
மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.