சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை 65 ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 826 ரூபாயாக இருந்த நிலையில் சிலிண்டரின் விலை 65 ரூபாய் குறைந்து 761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சற்று ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.