முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதில் முதலாவதாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி 8 மணி முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் அரசு நிவாரணத் தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் நிவாரணநிதி தரப்படும். முக கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.