Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ. 2000 இரண்டாம் தவணை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதலில் கையெழுத்து இட்டதே கொரோனா நிவாரண நிதிக்கு தான். தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூன் மூன்றாம் தேதி மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தடுப்பூசியைப் பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்காக மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |