Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம் தடை வழக்கு – சற்றுமுன் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு தெரிவித்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் தொல் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்றைய தினம்  நீதிபதி இளந்திரையன் முன்பு முறையிடப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இருப்பினும் தனி நீதிபதியினுடைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும். ஏனென்றால் இதை குற்ற முறையீட்டு வழக்காக தாக்கல் செய்யப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அதனை எதிர்த்து நீங்கள்  உச்சநீதிமன்றத்தில் தான் வழக்காக மேல்முறையீடு செய்ய முடியும்.

சென்னை உயர்நீதிமன்றத்தை கிளையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் முறையீடு அல்லது மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. எனவே ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருக்கக்கூடிய இந்த மேல்முறையீட்டு மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |