Categories
மாநில செய்திகள்

Breaking: இனிமேல் சம்பளம் உயர்வு – போக்குவரத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி…!!

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்து ஆனது. போக்குவரத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14வது ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏழு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அரசு போக்குவரத்து ஊழியரான ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூபாய் 2012,  அதிகபட்சம் ரூபாய் 7 981 ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது.அதே போல நடத்துனருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1965,  அதிகபட்சம் ரூபாய் 6,640 ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை சிஐடியு,  ஏஐடியுசி சங்கங்கள் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் இறுதி செய்ததை சிஐடியு,  ஏஐடியுசி ஏற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |