Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்: நீதிபதி கடும் கண்டனம் ..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து வரும் சஞ்சய்ராவத்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி,  சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் எந்தவித முகாந்திரமும் இன்றி சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்ததாக கண்டனம் தெரிவித்தது.  சஞ்சய்ராவத்தின் உதவியாளர் பிரவீன் ராவத் மீதான வழக்கு சிவில் தன்மை கொண்டது. குற்ற வழக்கு அல்ல.

சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதமானது என சிறப்பு நீதிமன்றம் இந்த கருத்தை முன் வைத்திருக்கிறது. எந்தவித காரணமும் இன்றி சஞ்சய் ராவத்தை கைது செய்தது அபட்டமான உண்மை என்றும் நீதிபதி காட்டம். சிவில் வழக்கை வெறும் சட்ட விரோத பண பரிவர்த்தனை என்றும்,

பொருளாதார குற்றம் என்று கூறுவதால் அது குற்ற வழக்கு ஆகாது என்று கூறி, அமலாக்க பிரிவிற்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து, காரணமே இன்றி அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதா ? என்றும் நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |