Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்…..!!

மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானார்.

மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.  95வயதான அவர்  பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்த இவர்  சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார்.

1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இந்திரா , ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியவர் ராம்ஜெத்மலானி. 2 ஜி , ஸ்பெக்ட்ரம் வழக்குகளிலும் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |