மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தான் இந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது
மதுரை நெல் பேட்டை பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினுடைய தேசிய செயற்குழு உறுப்பினர் யூசப் என்பவரின் வீட்டில் காலை 2:00 மணியிலிருந்து அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டார்கள். அதேபோல் மதுரையில் வில்லாபுரம், கோரிப்பாளையம் என பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புடன் இருக்கின்றார்கள்.