சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனி சட்டம் உருவாக்குங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும், அதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் நமக்கு தெரியும்.அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டது. இந்த சட்டத்தினால் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அப்போது , உச்சநீதிமன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் வசதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கவனித்துக் கொள்வதற்காக தனியாக ஒரு சட்டத்தை உருவாக்குங்கள் என்று ஒரே ஒரு அறிவுரை கொடுத்திருந்தார்கள்.
அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்ததால் தனி சட்டம் தொடர்பாக கேரள அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வி.பி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், உங்களுக்கு நாங்கள் நான்கு வார காலம் அவகாசம் தருகிறோம் , உடனடியாக சபரிமலைக்கு என்று தனியாக ஒரு சட்டத்தை உருவாக்குங்கள். பக்தர்களை பாதுகாப்பது , நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி குருவாயூர் கோவிலை போல ஒரு தனி சட்டத்தை உருவாக்குங்கள் என்று ஒரு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விரிவான அறிக்கையை ஜனவரி 3 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.