மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 62,000_த்துக்கும் அதிகமாமான காலி பணியிடங்களுக்கான குரூப் D தேர்வானது கடந்த ஆண்டு செப்டம்பர் 17_ஆம் தேதி முதல் டிசம்பர் 17_ஆம் தேதி வரை நடைபெற்றது.சென்னை உள்ளிட்ட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வு மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 572 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக
நடைபெற்றதேர்வில் 572 பேரில் 567 நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் கூறும் போது ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த தயக்கம் காட்டுகின்றனர். அதிகமானோர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார்.