தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 20 பேர், மியான்மர் – 1, டெல்லி – 4, மகாராஷ்டிரா – 1, ஆந்திரா – 3 , குஜராஜ் – 1 பீகார் – 2 ஹரியானா -1 கர்நாடகா – 6 கேரளா – 3 மகாராஷ்டிரா – 61 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1054 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 729 பேர் ஆண்கள், 417 பேர் பெண்கள், 3 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 12,049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,91,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 1,286 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 18,995 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,052 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.