தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பழங்குடியினர் நல்வாழ்வு அமைச்சர் அர்ஜூன் முண்டா அறிவித்துள்ளார். இதன்படி, நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றும், பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமைகள் நரிக்குறவர் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Categories