இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தி மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மாநில மொழிகளின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரையை செயல்படுத்தக் கூடாது என்று முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்