Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”பேரிடர் மாநிலமாக அறிவிப்பு” பினராயி விஜயன் உத்தரவு …!!

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாநிலத்தை பேரிடராக அறிவித்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் தங்கி படித்த கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு  தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா உறுதிபடுத்தினார்.

கேரளாவின் காசர் கோடு பகுதியை சேர்ந்த அவருக்கு இந்த பாதிப்பு உறுதியாகிய நிலையில் இது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து கேரள மாநில சுகாதாரத்துறை மத்திய அரசின் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இதையடுத்து கேரளாவில் மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகின்றது . நோய் தொற்று உறுதியாகியுள்ள 3 பேருக்கும் மிக கவனத்துடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் கேரளாவை  மாநில பேரிடராக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |