கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ மாநிலம் முழுவதும் சுற்றைக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளரிடம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இரண்டு முக்கிய சுற்றறிக்கை அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்கள் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும்,
மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் , டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும், கூடுமான வரைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் மாணவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் , மாணவர்கள் உடல்நலனில் பாதிப்பு ஏற்படும் போது அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார்கள்.அதை தொடர்ந்து இரண்டாவது சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றைக்கையில் , சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முக கவசம் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கி இருக்கிறது.