Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”மாணவர்களின் கைரேகை வாங்குங்கள்” மத்திய அரசுக்கு கடிதம்……!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய தேர்வு முகமை . எனவே நீட் ஆள்மாறாட்டத்திற்கும் ,  தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

இனி வரக்கூடிய காலங்களில் , அதாவது அடுத்த ஆண்டு பிளஸ் டூ முடித்து விட்டு நீட் தேர்வுக்கு வரும் மாணவரின் கைரேகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் , நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் MBBS படிப்புக்கு சேரும் போது அதே போல வாங்கும் கைரேகை ஒத்து போகிறதா ? என்பதை ஆராய வேண்டும் என்று இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |