சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து ரூ 33, 056க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 32 குறைந்து ரூ 4,132 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ 48 .60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.