திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் பல்வேறு கட்சிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவலும் பரவிய நிலையில் தற்போது அதிமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது.
இந்த நிலையில் தான் இன்று மாலை 5 மணி அளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, அதிமுகவில் இணையவுள்ளதாக தற்போது தகவலாக இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.