தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்தன் விளைவாக இந்த பரபரப்பு தற்போது வரை இருந்து வருகின்றது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று முடிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பரபரப்பான சூழலில் செயற்குழு கூட்டம் முடிவடைந்து முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை ? வருகின்ற ஏழாம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 12 மணியளவில் பதியப்பட்ட ட்விட் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் எம்எல்ஏ கூட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அதிமுகவில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.